(வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை பிரதேச சபை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதேச சபையின் உறுப்பினராக, பிரபல தொழிலதிபர் அப்துல் ஹமீத் மொகமட் காலித் நியமிக்கப்பட்டிருக்கிறார் .
மல்வத்தை வட்டார உறுப்பினர் இ.வளர்மதி கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டிருந்தது .அந்த இடத்திக்கு மொகமட் காலித் உறுப்பினராக
தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டு கடந்த சபை அமர்வில் அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
இவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தாபனத்தில் அம்பாறை ,மன்னார் ,கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் பணியாற்றினார். ஈஓசி வானொலி இயக்குனராக பணியாற்றிய அவர் பல பன்னாட்டு ஸ்தாபனங்களில்
சேவையாற்றிய அனுபவம் கொண்ட சமூக சேவையாளர் ஆவார்.
Post a Comment
Post a Comment