சிவராத்திரி விழா





 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவின் தென் கோடியில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கின்ற  ஆதி சிவன் ஆலயத்தின் வருடாந்த மகா சிவராத்திரி விழா, இம்முறை  ஆலயத்தலைவர் த.செல்லத்துரை தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

நேற்று (18) சனிக்கிழமை மாலை வழமை போல,சமுத்திரத்தில் கடல் நீர் எடுத்து தேரோடும் வீதிவழியாக பவனி வந்து, ஆதி சிவன் ஆலயத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது .

ஆலய பரிபாலன சபை தலைவர் த. செல்லதுரை தலைமையிலான குழுவினர் இந்த அபிசேகத்தில் பங்கு பற்றினர் .

பின்னர், அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று சிவலிங்கத்திற்கு  குடம் குடமாக நீர் சொரிந்து அபிஷேகம் செய்தனர்.

 தொடர்ந்து விடிய விடிய ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுடன் நான்கு சாம பூஜைகளும் இடம் பெற்றன.

 கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஆயிரம் அடியார்கள் அங்கு கலந்து கொண்டு  விழித்திருந்தார்கள்.