(வி.ரி.சகாதேவராஜா)
சமகால பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராமங்களில் வாழும் ஒரு தொகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால்
இந் நிகழ்வு நடாத்தப்பட்டது.
கண்ணகிகிராமம் சின்னபனங்காடு கோளாவில் வாச்சிகுடா அக்கறைப்பற்று7/4, 8/2 ஆகிய கிராமப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட இருபது பயனாளிகளுக்குஒரு குடும்பத்துக்கு தலா 10450.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் திட்ட இணைப்பாளர் அனிதா செல்வகுமார் மீளாய்வு கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி கிரிஜா ஆலையடிவேம்பு கள உத்தியோகத்தர் திருமதி நிஷாகரி பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர். ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணங்களை வழங்கி வைத்தனர்.
Post a Comment
Post a Comment