கஞ்சாவினை சூட்சுமமாக, விற்பனை செ ய்தவர் கைது




 


பாறுக் ஷிஹான்


கஞ்சாவினை  சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த   சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் வைத்து சந்தேக நபரான 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதானவராவார்.
 
இக்கைது நடவடிக்கையானது இன்று மாலை அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த  தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து  மேற்கொண்ட தேடுதலில்  குறித்த சந்தேக நபர்  கைதானார்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் வசம் இருந்து 800 கிராம் நாட்டு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும்    நீதிமன்ற   நடவடிக்கைக்கா   வெல்லாவெளி  பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.