கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை இன்று (24) மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகளை கண்காணித்ததுடன் குறித்த வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள புனர்வாழ்வு மையம் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் பிரதிநிதியாக பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ வாஜித் அவர்கள் பங்கு கொண்டதுடன் குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் அவசியம் தேவையான வளங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்
குறித்த நிகழ்வின் போது அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கௌரவ ஆளுநர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த விதம் என்பவற்றில் கௌரவ ஆளுநர் திருப்தி அடைந்து அதிதிகளுக்கான வரவுப்பதிவேட்டில் புறக்குறிப்பிட்டு வாழ்த்திச் சென்றமையும் விசேட அம்சமாகும்.
Post a Comment
Post a Comment