(மாளிகைக்காடு நிருபர்)
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சிலோன் மீடியா போரம், ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் அனுசரணையில் "ஒரு துளி இரத்தம் பலரது உயிர் காக்கும்" எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாமும் சுதந்திர நிகழ்வும் காலை (04) சாய்ந்தமருது வொலிவேரியன் கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம்.றிம்ஸான் தலைமையில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம். ஐ. முவஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.எம்.ஹமீட், நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச்.இஸ்மாயில், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ். அஷ்ரஃப்கான், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியர் எம்.ரி.என் சிபாயா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவிய லாளர்கள், கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் கலாச்சார மத்திய நிலையத்தின் வளாகத்தில் இடம்பெற்றது. இரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் தேவரஞ்சனி மற்றும் வைத்தியர் எம்.ரி.என் சிபாயா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment