( காரைதீவு சகா)
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 604 "ரொப் மௌன்டன்" Top Mountain ரக சிகரெட் வைத்திருந்தவருக்கு ஒரு லட்சத்து 1500 ரூபாய் தண்டப்பணம் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில். நேற்று (27) திங்கட்கிழமை விதிக்கப்பட்டது .
சந்தேக நபரை அக்கரைப்பற்று போலீசார் கைது செய்து அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நேற்று மன்றில் ஆஜர் படுத்தினர்.
அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி தெசிபா ரஜீவன் இவருக்கு சிகரட்டை வைத்திருந்தமைக்காக ஒரு லட்ச ரூபாய் தண்டப்பணமும், விற்பனை செய்தமைக்காக 1500 ரூபாய் தண்டப்பணம் சேர்த்து, மொத்தமாக ஒரு லட்சத்து 1500 ருபாய் தண்டப்பணம் விதித்தார்.
Post a Comment
Post a Comment