நூருல் ஹுதா உமர்
நலன்புரி நன்மைகள் சபையின் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியான நபர்கள்/குடும்பங்களை அடையாளம் காணுதல் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் தகவல்களை QR முறையினுாடாக தகவல் தளத்தில் உள்ளீடு செய்வதற்கான வேலை திட்டத்தின் பரீட்சார்த்த நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில்
சாய்ந்தமருது - 06 இல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, கணக்காளர் ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம். பளீல், தலைமை பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஏ.சபீர், பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் எம்.எம். மாஹிர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.நளீம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment