(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பினால்,
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப் பட்ட குடிநீர்த்தொகுதி அமைப்பு மற்றும் குழாய்க்கிணறு திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் நலன் கருதி குடிநீர்த்தொகுதி அமைப்பு மற்றும் குழாய்க்கிணறு என்பவற்றை அமைத்துத் தருமாறு குறித்த பாடசாலை நிர்வாகத்தினர்கள் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை மாநகர பிரதி முதல்வரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூரினால்,குறுகிய நாட்களுக்குள் குறித்த நீர்தொகுதி அமைப்பு மற்றும் குழாய்க்கிணறு என்பன அமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து
வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் நேற்று (03) இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வின் அங்கமாக அண்மையில் இடம் பெற்ற சதுரங்க விளையாட்டில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும் இதன்போது ரஹ்மத் மன்சூர் அவர்களினால்
வழங்கிவைக்கப்பட்டதுடன்,மாணவர் களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இதன் போது பிரதி அதிபர்களான எம்.ஆர்.நெளஷாத், எஸ்.எம்.றிஸானா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களும் இவ்வாறான பயன்மிக்க சேவையை, மேற்க்கொண்ட கல்முனை மாநகர பிரதிமுதல்வரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் உட்பட ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை நல்கிய அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் ஏ.எச்.அலி அக்பர் இதன் போது நன்றியினை தெரிவித்தார்.
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன் சார் சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Post a Comment