.
சுகிர்தகுமார்அம்பாரை மாவட்ட விவசாயிகளின் நெல் உற்பத்தியை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாக கமக்காரர் நலன்புரி சங்கத்தின் தலைவர் எம்ஜஏஆர். புகாரி தெரிவித்தார்.
பெரும்போக அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அம்பாரை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல் குறைந்த விலைக்கு தனியார் நெற் கொள்வனவாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டு வந்தது.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் அம்பாரை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ஜே.எம் எ. டக்ளஸின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் கமக்காரர் நலன்புரி சங்கத்தின் தலைவர் எம்ஜஏஆர். புகாரி தலைமையிலான ஓய்வு நிலை நில அளவை அத்தியட்சகர் தர்மேந்திரா. மொட்டையாகல் கமக்காரர் அமைப்பின் தலைவர் ஏ.எல்.முகைதீன்பாவா பொருளாளர் எம்.தங்கவேல் செயளாளர் சுரேஸ் ஸ்ரிபன்சன் உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் நேற்று (16)அவரை சந்தித்து நிலைமை தொடர்பில் விளக்கினர். இதன் பயனாக இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாக நலன்புரி சங்கத்தின் தலைவர் எம்ஜஏஆர். புகாரி; கூறினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மாவட்ட அரச அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் இதன் பிரகாரம் உடன் அறுவடை செய்த நெல் மூடை ஒன்று 5800 வரையிலும் காய்ந்த நெல் மூடை ஒன்று 6500 வரையிலும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆகவே விவசாயிகள் தங்களது நெல் உற்பத்தியை அநியாய விலைக்கு விற்பதை தவிர்க்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் நெல் உற்பத்தியினை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
Post a Comment
Post a Comment