புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி





மாளிகைக்காடு நிருபர்

2022 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில்  கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவன் சமி யூசுப் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.

மேலும் பரீட்சைக்குத் தோன்றிய ஏழு மாணவர்களில் சித்தி புள்ளிகளான 70 புள்ளிகளுக்கு மேல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து சித்திவீதம் 86%  இனைப் பெற்றுள்ளார்கள். இவ்வடைவினைப் பெற்ற மாணவர்களை பாராட்டுவதோடு இப்பெறுபேற்றினைப் பெறுவதற்கு முயற்சித்த அதிபர், பகுதி தலைவர், வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் பாடசலை நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.