துவிச்சக்கரவண்டிப் பவனி




 


.சுகிர்தகுமார் 0777113659 


  அக்கரைப்பற்று பெப்பிள்ஸ் அகடமி சர்வதேச பாடசாலையின் வருடாந்த துவிச்சக்கரவண்டிப் பவனி, 'சகலருக்கும் பாதுகாப்பான வீதி விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உருவாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று இடம்பெற்றது.
; வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் தாங்கியவாறு வலம் வந்தமை சிறப்பானதாக அமைந்தது.
துவிச்சக்கர வண்டிப் பவனியானது பாடசாலையிலிருந்து ஆரம்பமானது. அங்கிருந்து அக்கரைப்பற்று மணிக்குகூட்டுக்கோபுர சந்தியினூடாக பொலிஸ் நிலையம் சென்றது.
அங்கு வீதி போக்குவரத்து பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் முன்பாக மாணவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன் பின்னர் பொறுப்பான அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், மாணவர்களால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, பிரதான வீதியூடாக துவிச்சக்கர வண்டிகளில் பவனி வந்தனர்.
இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதோடு, பாடசாலையில் பிரமத நிறைவேற்று அதிகாரி இன்ஸாப் சரிப்டீன் மற்றும் பாடசாலையின் அதிபர் தாரிக் அஸீஸ் உட்பட பாடசாலை முகாமைத்துவக் குழு, ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்