சத்துமாப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது





( காரைதீவு  சகா))

கல்முனை ஆதார வைத்தியசாலை ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேசத்திலுள்ள நலிவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துமாப் பொதிகள்  (24) வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் (FOBH-UK) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் சத்துமா விநியோகம் இடம் பெற்றது.

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி நடராஜா அருந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன், பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர்  சா.இராஜேந்திரன் சமுக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அவர்கள் 150 பயனாளிகளுக்கான 
சத்துமா பொதிகளையும் வழங்கி வைத்தனர்.

கல்முனை பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக 3000 பொதிகள் விநியோகித்து இரண்டாம் கட்ட விநியோகத்தை நிறைவு செய்துள்ளனர்.