மாவட்ட ரீதியிலான தேசிய சமாதான பேரவையின் ஒருங்கிணைப்பு கூட்டம்!




 


(நூருல் ஹுதா உமர்)


தேசிய சமாதானப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ரீதியிலான இனமுறுகல்கள் அல்லது இனப் பிரச்சினைகள் சார்ந்த விடயங்கள் வருகின்ற போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட மொழிகள் மற்றும் இன மேம்பாட்டு உத்தியோகத்தர் பிரதிஷ்கரன் அவர்களின் ஒருங்கிணைப்பில்  இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், அம்பாறை மாவட்ட தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் உவைஸ் மதனி ,  அம்பாறை பள்ளிவாயல் தலைவர்  யூசுப், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபிக், றுஹூணு லங்கா அமைப்பின் தலைவர் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜௌபர் (நளீமி) , திட்ட இணைப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எம்.இக்ராம், சமூர்த்தி அதிகாரிகள் , மற்றும் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.