வி.சுகிர்தகுமார் 0777113659
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர்களை அறிவூட்டல் மற்றும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளை தெளிவூட்டல்; செயலமர்வு அக்கரைப்பற்று தனியார் விடுதியில் இன்று (26) நடைபெற்றது.
பஃவ்ரல் மற்றும் எம்எஸ்ஐ ஐடியா நிறுவனங்களின் அனுசரணையுடன் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில், அம்பாறை மாவட்டத்தின் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் ஊடாக போட்டியிடும் இளம் அபேட்சகர்கள், சமயத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ,உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் வகிபாகம், அதன் தொழிற்பாடுகள், ஜனநாயக ஒழுக்க விழுமியங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார செலவு மற்றும் தவறான தேர்தல் செயற்பாட்டால் எதிர்கொள்ள வேண்டியச சட்ட சிக்கல்கள் உள்ளிட்ட தலைப்புக்களில் விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இதேநேரம் வேட்பாளர்கள் கட்சி ரீதியாக குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களின் கொள்கைகள் மற்றும் தேர்தலின் வகிபாகங்கள் தொடர்பில் குழுச்செயற்பாடுகள் ஊடாகவும் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
அத்தோடு செயலமர்வில் கலந்து கொண்ட சிவில் சமூக அமைப்புக்கள் பிரதிநிதிகள் வயதடிப்படையில் இரு குழுவாக பிரிக்கப்பட்டு குழுச்செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் வேட்பாளர்களிடம் இருந்து சமூக அமைப்புக்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கம் நிறைந்த அரசியல் கலாசாரம் போன்ற மார்ச் 12 இயக்கத்தின் எட்டம்ச கொள்கைள் தொடர்பிலும்; சிவில் சமூக அமைப்புக்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளரும் பஃவ்ரல் அமைப்பின் மாவட்ட இணைப்பாளருமான வி. பரமசிங்கம் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பஃவ்ரல் அமைப்பின் வளவாளர்களாக ஆ.சொர்ணலிங்கம், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி செல்வராஜா துஷ்யந்தன், கலந்து கொண்டு விரிவுரைகள் மூலமாக விளக்கமளித்ததுடன் பஃவ்ரல் அமைப்பின் திட்ட முகாமையாளர் பிரசன்யா பாக்கியசெல்வம், திட்ட அலுவலர், சங்கரி சுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் சுரேக்கா பிரியதர்ஷனி உள்ளிட்டவர்களும்; பங்கேற்றனர்.

Post a Comment
Post a Comment