உலக அமைதிக்கான பிரார்த்தனை






வி.சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள உலகம் உய்ய அவதரித்த பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் தைப்பூச தினமான நேற்று உலக அமைதிக்கான பிரார்த்தனையும் விசேட பூசையும் நேற்று இடம்பெற்றது.

இதன்போது வட இந்திய இமய மலையில் ஊற்றெடுக்கும் புனித நர்மதா நதியில் கண்டெடுக்கப்பட்டு ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள சக்திமிகு பானலிங்கத்திற்கு பக்தர்கள் அவர்களது கரங்களால் பால் அபிசேகம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஆசிரமத்தின் ஸ்தாபகரும் பகவான் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பவருமான ச.சாம்பசிவம் தலைமையில் இடம்பெற்ற பிரார்த்தனையும் விசேட பூசையும் மற்றும் பால் அபிசேகம் செய்யும் நிகழ்விலும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு தைப்பூச நாள் மற்றும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அற்புதங்கள் தொடர்பான  விசேட சமய சொற்பொழிவும் சமய பெரியார்களால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இமய மலையில் உற்பத்தியாகும் இந்து கங்கை யமுனா கோதாவாரி நர்மதா பாகிரதி சரயுநதி காவேரி அகலநந்தா உட்பட புனித நதியில் சேகரிக்கப்பட்ட 1008 தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டதுடன் அன்னதானமும் இடம்பெற்றது.

ஆசிரமத்தில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அற்புதங்கள் தொடர்பான  நூல்களும் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரியது.