வி.சுகிர்தகுமார் 0777113659
75ஆவது பவள விழா தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் அரச நிறுவனங்களிலும் சிறப்பாக உணர்வு பூர்வமாக இன்று (04) கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றன.
இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி நிருவாக உத்தியோகத்தர் சோபிதா திட்டமிடல் பணிப்பாளர் ஹ}{சைன்டீன் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் ஆகிவற்றோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில்; சர்வமத சமய அனுஸ்டானம் இடம்பெற்றது. பின்னர் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகையும் ஆரம்பிக்கப்பட்டதுடன் மரநடுகையினை பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைய அலுவலக உதவியாளர் திருநாவுக்கரசு நாட்டி வைத்தமை சிறப்பம்சமாக அமைந்தது.
பிரதேச செயலாளரின் உரையில் நமது ஆரம்ப கல்வி முதல் பல்கலைக்கழகம்வரைக்கும் பொதுமக்களின் வரிப்பணம் எனும் முதலீட்டின் ஊடாக கல்வி கற்று படித்தவர்கள் எனும் பெயரோடு வாழ்ந்து வருகின்றோம். அதன் பிற்பாடும் அரச தொழிலை பெற்று அதன் மூலம் பெறும் சம்பளம் தொடக்கம் ஓய்வூதியம் வரைக்கும் பெறும் மிகப்பெரும் தொகை பணமும் பொதுமக்களின் வரிப்பணம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும் என்றார்.
கல்வி கற்கும் காலம் முதல் ஓய்வூதியம் பெறும் வரைக்கும் நமக்காக செலவு செய்யும் பணத்தை கணக்கிட்டு பார்த்தால் குறைந்தது ஒருநாள் 50 ஆயிரம் ரூபாவை அரச உத்தியோகத்தர்கள் பெறுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு பெறும் சம்பளத்திற்கு ஏற்றதுபோல் மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய சேவையின் அளவும் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பிரதேச செயலகம் எனும் போது ஏனைய அரச திணைக்களங்களை விட அதிக பொறுப்பு வாய்ந்தது. மக்களது வாழ்வாதரத்தை உயர்த்துவதில் அதிக அக்கறையுடன் செயற்படவேண்டிய அரச நிறுவனம். பிரதேசத்தில் உள்ள வளங்களை கொண்டு உச்சபயன்பாடு பெறும் வகையில் செயற்படுத்தி மக்களின் தொழில் மட்டத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment
Post a Comment