( காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அதிபராக திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்.
1936ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் 87 வருட வரலாற்றில் வரலாற்றில் ஒரு பெண்மணி அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டமை இதுவே முதற் தடவையாகும்.
இதுவரை அதிபராக இருந்து சீ. பாலசிங்கன் தனது அறுபதாவது வயதில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய அதிபர் பதவியேற்பு விழாவில்
சம்மாந்துறை வலய கல்வி பணிமனையின் நிருவாகத்திற்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் எம் வை. யாசிர் அரபாத் கோட்டக்கல்வி பணிப்பாளர் பி பரமதயாளன் உதவி கல்விபணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பதவியேற்பைத்தொடர்ந்து பாடசாலை முகாமைத்துவ குழுவினருடன் அதிகாரிகள் கலந்துரையாடினார்கள்.
Post a Comment
Post a Comment