பாறுக் ஷிஹான்
விளையாட்டு போட்டி எமக்கு பல்வேறு படிப்பினைகளை தந்திருக்கின்றது.இதில் வெற்றி தோல்விகளை தாங்கி கொள்கின்ற நிலையினை மாணவர் மத்தியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும்.எமது பிள்ளைகளுக்கு இவ்விடயங்களை ஊட்டுவதனால் எதிர்காலத்தில் தேவையற்ற பழக்கங்களில் இருந்து அவர்கள் விலகி பிரகாசிக்க முடியும் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் திங்கட்கிழமை(7) மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
இப்பாடசாலை வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாளாக பதியப்படுகின்றது.அதாவது இப்பாடசாலையின் விளையாட்டு போட்டி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.கடந்த காலங்களில் இப்பாடசாலையில் பல அதிபர்கள் கடமையாற்றி இருந்த போதிலும் இவ்வாறான ஒரு விளையாட்டு போட்டி ஒரு மைதானம் இன்றி நடைபெற்றிருக்கவில்லை.இருந்த போதிலும் ஒரு மைதானமின்றி ஒரு பெண் அதிபரினால் பிரமாண்டமான விளையாட்டு போட்டி ஒன்றினை நடாத்த முடியும் என்றால் ஒரு சாதனை தான்.எமது வலயக்கல்வி சார்பாக அதிபரை நாங்கள் பாராட்டுகின்றோம்.மார்ச் 31 திகதிக்குள் புதிய சுற்றுநிருபம் படி இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும் என அதிபர்களுக்கு அறிவுறுத்தல்களை நாம் வழங்கி இருந்தோம்.
அறிவுறுத்தல்களை நாம் வழங்கி இருந்தோம்.
இருந்த போதிலும் ஒரு சில பாடசாலைகளே இவ்வாறான விளையாட்டு போட்டிகளை விரைவாக இது போன்று நடாத்தி இருந்தன.பல விளையாட்டு பயிற்சியாளர்கள் உள்ளிட்ட வளங்களை கொண்ட பாடசாலைகள் இவ்வாறான விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு முன்வராத சந்தர்ப்பத்தில் ஒரு பெண் அதிபராக இருந்து எவ்வித விளையாட்டு பயிற்சியாளர்கள் விளையாட்டு ஆசிரியர்கள் மைதானம் இன்றி ஒரு பெண் அதிபராக இருந்து கொண்டு இவ்வாறான பிரமாண்டமான விளையாட்டு போட்டி நடாத்தி காட்டி இருக்கின்றமை ஒரு முன்மாதிரியான செயற்பாடாகும்.விசேடமாக இப்பாடசாலை அதிபர் மஜீதியாவிற்கு வலயக்கல்வி பணிப்பாளர் என்ற ரீதியில் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பிரதி பணிப்பாளர் மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment