(எம்.என்.எம்.அப்ராஸ்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,இளைஞர் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் ஈடுபாட்டுடன்"75 வயதில் இளைஞர்களின் மாதிரி" -ஒரு பசுமையான இலங்கை எனும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது
இதற்கமைய அம்பாரை மாவட்டத்தில் தூய்மையான மற்றும் பசுமையான நகரத்தை உருவாக்கும் முகமாக
சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி எஸ்.எம்.ரிசாத்அவர்களின் கோரிக்கைகமைய,சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி அவர்களின் நெறிப்படுத்தலில்,சாய்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ஏ.எம்.ஹிசாம் அவர்களின் ஏற்பாட்டிலும் சிரமதான பணி மற்றும் மர நடுகை இன்று (03) இடம்பெற்றது.
இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.ஏ.ஆசிக், திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் எம்.மாஹிர், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி
ஏ.முபாரக் அலி,கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல்,
சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஹமீர்,சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.முபாரக்,
சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் செயலாளர் ஐ.எல்.எம்.மன்சூர்,கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக்,வைத்தியர் ஏ.எஸ்.என்.சூஸான்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிமனையின் சிரேஷ்ட முகாமைததுவ உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான ஏ.அஸ்வர்,சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விரிவுரையாளர்கள்,சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதி சிப்னாஸ் அஸீஸ்,சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள்,சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் இளைஞர்கள்,யுவதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment