வி.சுகிர்தகுமார் 0777113659
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நினைவேந்தலின் 5ஆவது தொடர் நிகழ்வும் அவர்தம் உறவுகளை கௌரவித்தலும் நிகழ்வும் நேற்று மாலை (26) அக்கரைப்பற்று பாவேந்தர் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில் காரைதீவு முன்னாள் பிரதேசசபை தவிசாளர் திரு.செ.இராசையா. தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அம்பாறை மாவட்ட தலைவர் தோழர் சங்கரி, செயலாளர் தோழர் கங்கா, ஈரோஸ் ஜனநாயக முன்னணி அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் கனகரெத்தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் கரன் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் தோழர்கள் மதன், சின்னத்துரை, வரதன், சற்குணம், தாஸ், கோபன் மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய தலைவர் வி.புண்ணியமூர்த்தி உயிர்நீத்தவர்களின் உறவுகள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த உயிர்நீத்தவர்களின் உருவப்படத்திற்கு உறவுகள் இணைந்து ஈகைச்சுடரேற்றினர்.
தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயிர்நீத்தவர்களின் உறவுகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உயிர் நீத்த அனைத்து உறவுகள் சார்பாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா உள்ளிட்டவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடிவிற்காக முன்னெடுத்த அர்ப்பணிப்பான நடவடிக்கை மற்றும் அவர்களை நினைவு கூரவேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார்.
மேலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால செயற்பாடுகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்தார்.
இதன் பின்னராக உயிர்நீத்தவர்களின் உறவுகள் கௌரவிக்கப்பட்டதுடன் உயிர்நீத்தவர்களின் புகைப்படங்களும் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இங்கு உரையாற்றிமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment