கேப்டவுன்: 8-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் 'குரூப் 2' பிரிவில் உள்ள இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது. இங்கிலாந்திடம் மட்டும் 11 ரன்னில் தோற்றது. 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
'குரூப் 2' பிரிவில் இருந்து இங்கிலாந்து ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. இதையும் படியுங்கள்: ஐபிஎல் போட்டிக்கு தயார்- சிஎஸ்கே அணிக்காக பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர் 'குரூப் 1' பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. 4-வது அணியாக நுழைவது யார்? என்று இன்றைய போட்டி முடிவில் தெரியும். இதற்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் உள்ளன. இன்று நடைபெறும் கடைசி 'லீக்' ஆட்டங்களில் இங்கிலாந்து-பாகிஸ்தான் (மாலை 6.30 மணி), தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் (இரவு 10.30 மணி) மோதுகின்றன. இங்கிலாந்து 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அந்த அணியும், நியூசிலாந்தும் தலா 4 புள்ளியுடன் சம நிலையில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும். தென் ஆப்பிரிக்கா தோற்றால் வெளியேறும். 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை ரன்ரேட்டில் மோசமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டது.
Post a Comment
Post a Comment