(வி.சுகிர்தகுமார்)
உலக இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் திருவெம்பாவையின் திருவாதிரை தீர்த்தோற்சவம் திருவெம்பாவை வழிபாடுகள் அம்பாரை மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அனைத்து ஆலயங்களிலும் இன்று இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்தோற்சவ கிரியைகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய விநாயகப் பெருமான் பக்தர்கள் புடைசூழ அரோகரா எனும் வேண்டுதலுடன் வங்கக் கடலை சென்றடைந்தார்.
அங்கு இடம்பெற்ற அபிசேக பூஜைகளின் பின்னர் எம்பெருமான் தீர்த்தம் ஆடினார்.
கடந்த ஒன்பது நாட்கள் நடைபெற்ற திருவெம்பாவை விசேட பூஜை வழிபாடுகளிலும் பத்தாம் நாளாகிய இன்று வங்கக்கடலில் இடம்பெற்ற சமுத்திர தீர்த்தோற்சவத்திலும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வழிபாடுகளையும் கிரியைகளையும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.

Post a Comment
Post a Comment