“ரிஷப் பண்ட்” குணமடைய காலமெடுக்கலாம்




 


ரிஷப் பண்ட் குணமடைய குறைந்தது

3 முதல் 6மாதங்கள் வரை என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
ரிஷப் பண்ட் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்றனர் டேராடூன். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரரான ரிஷப் பண்ட் தனது சொகுசு காரில் டெல்லியில் இருந்து உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார். கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தலை, முதுகு, கால் ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது கணுக் காலில் ஜவ்வு கிழிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரிஷப் பண்ட்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ரிஷப் பண்டின் காயங்கள் முழுமையாக குணமடைந்து அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.