உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
வேட்புமனு கோரப்பட்டு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் இயங்கும் புதிய இலங்கை சுதந்திர கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தேர்தல் கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, புல்மோட்டை பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை, ஏறாவூர் நகரசபை, காத்தான்குடி நகரசபை, அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைசேனை பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில் புதிய இலங்கை சுதந்திர கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்க விருப்பமுடைய நன்னடத்தை கொண்ட இலங்கை அரசியலில் மாற்றத்தை விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
76 673 5454 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது. மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment