அவரோன் தொண்டு நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு




 


(சுகிர்தகுமார்)


  குருநாகலை தலைமையகமாக கொண்டு செயற்படும் அவரோன் இன்டநெசனல் அமைப்பினூடாக அம்பாரை மாவட்டத்தில் இயங்கவுள்ள அவரோன் தொண்டு நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

அவரோன் இன்டநெசனல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எஸ்.நசாட் கலந்து கொண்டு தொண்டு நிறுவனத்தின் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

முற்றும் முழுதாக கல்வித்தேவையுடைய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கல்வித்தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தொண்டு நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் கலந்து கொண்டனர்.

இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல மாணவர்களும் நன்மையடையவுள்ளதாகவும் அவ்வாறான மாணவர்களை இனங்கண்டு தமது சேவை தொடரும் எனவும் அவரோன் இன்டநெசனல் நிறுவனம் மற்றும் அவரோன் தொண்டு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எஸ்.நசாட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.