அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலை முன்பாக அமைதியான விழிப்புணர்வு





இலவச சுகாதார சேவையினை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்' -அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலை முன்பாக அமைதியான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்.

வி.சுகிர்தகுமார் 


  'இலவச சுகாதார சேவையினை பாதுகாப்பதற்கு  அனைவரும் ஒன்றிணைவோம்' எனும் கோசத்தை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவைச் சேர்ந்த அரச வைத்திய அதிகாரிகள் இன்று அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலை முன்பாக அமைதியான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
'இலவச மருத்துவ சேவையை பாதிப்புக்குள்ளாக்கும்  செயற்பாட்டை  தோற்கடிப்போம் ' எனும் கோசத்தை முன்வைத்து குரலெழுப்பிய வைத்தியார்கள்   அதிகரித்து வரும் மருந்து தட்டுப்பாடு, பாரிய இலஞ்சம் மற்றும் ஊழல், திறணற்ற சுகாதார அமைச்சு, மருந்து மாபியா, வைத்தியர்களை  பிரச்சனைக்குள் தள்ளுதல், வைத்தியர்கள் நாட்டில் இருந்து வெளியேறுகின்றமை, போன்ற செயற்பாடுகளை எதிர்த்து தெளிவு படுத்தும் துண்டுப்பிரசுரங்களையும்  விநியோகித்ததோடு  பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலமொன்றிலும் ஈடுபட்டனர்.
வைத்தியசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி பிரதான வீதகளினூடாக சென்று வைத்தியசாலை முன்பாக வந்து சேர்ந்தது.
இங்கு ஊடகங்களுக்கு வைத்தியர்களும் பொதுமக்களும் 'இலவச சுகாதார சேவையினை பாதுகாக்க வலியுறுத்தி  கருத்துக்களை முன்வைத்தனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர்  டாக்டர் எம்.எ.சுகைல் மற்றும்
 பொது மக்களும்  தமது கருத்துக்களை பதிவு செய்தனர்-...