இரண்டு குடும்பங்களுக்கு இரண்டு வீடுகள்




 


(வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  சங்கமன்கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களில் இரண்டு குடும்பங்களுக்கு இரண்டு வீடுகள் நிருமாணித்து கையளிக்கப்பட்டன.

 திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் வழிகாட்டுதலின் கீழ்  மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக பண்பாட்டு அறப்பணி மன்றத்தின் அனுசரணையில் இந்த இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டன.

 அக்குடும்பங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு தான்டியடி சங்கமன் கிராமத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக பண்பாட்டு அறப்பணி மன்றத்தின் இணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர் குடும்பத்தினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்