'மருதமுனை சமாதான நீதிபதிகள்' நூல் வெளியிடப்படவள்ளது




 


ஊடகவியலாளர் மருதமுனை நபாயிஸ் எழுதிய மருதமுனை ஆவணக்காப்பகத்தின் வெளியீடான 'மருதமுனை சமாதான நீதிபதிகள்' நூல் வெளியீடு சனிக்கிழமை (28-01-2023)காலை 9.00 மணிக்கு மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் ஏ.பீ.எம்.மரைக்கார் நினைவரங்கில்  நடைபெறவுள்ளது.


கல்முனை வடக்கு முஸ்லீம் சமாதான நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும்,ஓய்வு நிலை வருமான வரி மதிப்பீட்டாளரும்,பிரசித்த நொத்தாரிஸு மான சமாதான நீpதிபதி ஏ.எல்.எம்.முனாஸ் தலைமையில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம்,வட மாகாணத்திற்கான குடியியல் ,மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத்லெப்பை அப்துல் மனாப் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை தொழில் நியாமன்றின் தலைவரும்,மேலதிக நீதிவானுமாகிய வி.எம்.சியான், பொத்துவில் நீதிவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும்.நீதிவானுமாகிய ஏ.சி.றிஸ்வான்,அக்கரைப்ற்று மாவட்ட நீதிபதியும்,நீதிவானுமாகிய எம்.எச்.எம். ஹம்ஸா மற்றும் சிறப்பு அதிதியாக ஓய்வு நிலை அதிபர் ஏ.ஆர்.அப்துல் றாசிக் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.