நூருல் ஹுதா உமர்
அரச ஊழியர்களுக்கான 150 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நாள் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் அவர்களின் வழிகாட்டலில், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீளின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் , மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம்.பாயிஸ், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஏ.எல்.எம்.மாஹிர், எம்.எச்.எம்.ஹம்சார்
சிரேஸ்ட காணி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ராபி, சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் மற்றும் சிங்கள பாட வளவாளராக ஏ.எம்.எம்.முஜீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பாடநெறி உத்தியோகத்தர் நலன்புரிசங்க செயலாளர் எம்.எஸ்.எம்.றியாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெறுகின்றது.
Post a Comment
Post a Comment