புகையிரத பயணிகளுக்கான அறிவித்தல்




 


கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கும் புகையிரதம் இன்று (08) முதல் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு புகையிரத மார்க்கத்தின் புதுப்பிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, சுமார் 5 மாதங்களுக்கு வடக்கிற்கான புகையிரத மார்க்கத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.