ஆலையடிவேம்பில், தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்




 .


(சுகிர்தகுமார்)


  ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

தமிழ் இலக்கிய பேரவைத் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்  பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்க தலைவர் இ.ஜெகநாதன் இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் தமிழ்ச்சங்க கௌரவ தலைவர் இரத்தினவேல் ஓய்வு நிலை நிருவாக உத்தியோகத்தர் தர்மதாச உள்ளிட்டவர்கள் பேராளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வினை சிறப்பிக்கும் சீராளர்களாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தௌபீக் மற்றும் றிம்சான் கலாசார உத்தியோகத்தர் கோகுலதாஸ் மற்றும்  ஜௌபர் கவிஞர் பாலமுனை பாறூக் எழுகவி ஜெலீல் கலாபூசணம் அக்கரை மாணிக்கவாசகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிதிகளை வரவேற்கும் நிகழ்வோடும் ஆரம்பமான நிகழ்வில் இன்றைய இளம் சமூகத்தினரின் வளர்ச்சிக்கு காரணம் குடும்பமா? சமுதாயமா? எனும் தலைப்பிலான இறைபணிச்செம்மல் த.கயிலாபிள்ளை தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் அதிபர் எஸ்.மணிவண்ணன் ஓய்வு நிலை விரிவுரையாளர் என்.செல்வநாதன் ஆகியோர் குடும்பமே எனவும் தமிழ் இலக்கிய பேரவை தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி  ஆசிரியர் தா.ஜெயாகர்  கவிஞர் எல்.சஞ்சிகா ஆகியோர் சமுதாயமே எனவும் தமது கருத்துக்;களை முன்வைத்து பட்டிமன்றத்தை சிறப்பாக நடாத்தி பெரும் வரவேற்பபை பெற்றுக்கொண்டனர்.


நடாத்தி பெரும் வரவேற்பபை பெற்றுக்கொண்டனர்.


இதன் பின்னராக எழுத்தாளர் கலாபூசணம் ஜோன்ராஜன் தமிழ் இலக்கிய பேரவை சார்பாக அதிதிகளால் மாலை அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். கலை இலக்கிய துறையில் வெற்றி பெற்ற மாணவர்கள் சிலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்வுகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அதிதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டிமன்ற நிகழ்வை பாராட்டியதுடன் சாதனை மாணவர்கள் மற்றும் சமூக பெரியோர்களின் கௌரவிப்பினையும் மனமகிழ்ந்து உளமார வரவேற்பதாகவும் கூறினர்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்  தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்தை மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தினை கனேடிய பிரதமரும் இணைந்து கொண்டாடியதுடன் அதன் சிறப்பைப பற்றியும் உரையாற்றியுள்ளார். இவ்வாறே தமிழ் மொழி மேல் உலகவாழ் மக்கள் கொண்ட பற்றினையும் எடுத்துரைத்தார்.