(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்திலும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களில்; தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு விவசாயிகளும் பொது மக்களும் தைமகளை வரவேற்று அதிகாலை நேரத்தில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கலிட்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அதிகளவான மக்கள் வீடுகளிலும் ஆலயங்களிலும் தைப்பொங்கல்; வழிபாடுகளிலும்; ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயம் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஸ்ரீ சீரடி சாயி பாபா ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் தைப்பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.
வழிபாடுகளில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

Post a Comment
Post a Comment