பிரியாவிடை





காரைதீவு குறூப் நிருபர் சகா)

 கல்முனை பிராந்திய சுகாதார திணைக்களத்தில் 22 வருடங்கள்  உயிர் மருத்துவ பொறியியலாளராக சேவையாற்றி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும்  இராசையா ரவிச்சந்திரனுக்கு  பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொறியியலாளர் ரவிச்சந்திரனுக்கு நேற்று முன்தினம் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.

காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் ரவிச்சந்திரனுக்கு காரைதீவு வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
 அச்சமயம் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு  பாராட்டினார்கள்.