இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே




 


இந்தியாவும் இலங்கையும் இன்று விளையாடிய டி20 போட்டியில், இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், இறுதியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி முதல் ஓவரில் 2 ரன்களோடு தனது ஆட்டத்தைத் தொடங்கியது. யார்க்கர் பாலுடன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தொடங்கினார்.

ஆனால், இரண்டாவது ஓவரில் அஜந்தா மெண்டிஸ், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அணிக்கான ரன் கணக்கைத் தொடங்கி வைத்தார். அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் ஒரு ஓவரிலேயே அடுத்தடுத்து மூன்று நோ பால் விழுந்த நிலையில் இலங்கை அணி அந்த ஓவர் இறுதியில் 21 ரன்களுடன் இருந்தது.

அடுத்தடுத்து பவுலிங் போட்ட ஷிவம் மாவி, அக்ஷர் பட்டேல், யஸ்வேந்திர சாஹல், என்று இந்திய அணி தரப்பில் பந்துவீச்சு பாணியை மாற்றி முயன்று கொண்டிருந்தனர். ஆனால், மெண்டிஸ் தொடர்ந்து அடித்த பவுண்டரிகள் இலங்கை அணியின் ஸ்கோர் கணக்கை ஆறாவது ஓவர் தொடங்கியபோது 50 ரன்களுக்குக் கொண்டு சென்றது.

ஏழாவது ஓவரிலும் 8வது ஓவரிலும் நிஸ்ஸாங்க, மெண்டிஸ் ஆகியோர் அடித்த சிக்ஸர்களும் பவுண்டரிகளும் 8வது ஓவர் இறுதியில் இலங்கை அணிக்கு 80 ரன்களைக் குவிக்க உதவியது. 9வது ஓவர் வரை இலங்கை தரப்பில் நிஸ்ஸாங்கவும் மெண்டிஸும் ஆடிக் கொண்டிருந்த அதிரடி ஆட்டத்தை யஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் மெண்டிஸ் எல்பிடபுள்யூ மூலம் அவுட்டானார்


அவுட்டாக்கினார்.

அவரைத் தொடர்ந்து வனிண்டு ஹசரங்கவும் உம்ரான் வீசிய 16வது ஓவரிலேயே அவுட்டானார். அந்த ஓவரில் அசலங்க ஒரு சிக்சர் அடித்திருந்தாலும், உம்ரான் மாலிக் பந்து வீச்சில் இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிந்த நிலையில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியா தனது பந்துவீச்சில் 7 நோ பால்களை வீசியது. அதில் ஐந்து நோ பால்கலை அர்ஷ்தீப் சீங் வீசியிருந்தார். டி20 தொடர்களில் தொடர்ந்து மூன்று நோ பால்களை வீசிய வீரர் என்ற பெயர் தற்போது அர்ஷ்தீப் சிங்குக்கு வந்துள்ளது. இந்தப் போட்டி அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை.


கணக்கைத் தொடங்கியது.

ஆனால், இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கக் காத்திருந்தார் கசுன் ரஜிதா. அவருடைய பந்துவீச்சின் தொடக்கத்திலேயே இஷான் கிஷன் அவுட்டானார். இலங்கை அணிக்கான விக்கெட் கணக்கையும் அவர் அதன் மூலம் தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, அதிரடியாக பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கினார்.

ஆனால், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாமல் அதே ஓவரில் தீக்ஷனவின் கேட் மூலம் கில்லையும் அவுட்டாக்கினார் ரஜிதா. மூன்றாவது ஓவரை வீசிய மதுஷங்கவும் இரண்டாவது ஓவரில் அதிரடியாக பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கிய ராகுல் திரிபாதியை ஐந்து ரன்களோடு மெண்டிஸின் கேட்ச் மூலம் வெளியேறச் செய்தார்.

இந்தியாவின் ஆட்டத்தை இலங்கை அணியின் பந்துவீச்சும் கடுமையான ஃபீல்டிங்கும் திணறடித்துக் கொண்டிருந்தது. ஐந்தாவது ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவும் மெண்டிஸின் கேட்ச் மூலம் அவுட்டானார். ஐந்தாவது ஓவர் வரை நான்கு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், இலங்கை அணி விக்கெட் ஏதும் இழக்காமல் ஐந்து ஓவர் இறுதியில் 49 ரன்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே