வருகை தருகின்றார்




 


(சுகிர்தகுமார் )


  புட்டபர்த்தி பிரசாந்தி நிலைய சமஸ்கிருத அறிஞர் சாய் சகோதரர் ஸ்ரீ வேதநாராயணன் வீரமுனை வருகின்றார்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அணுக்கத் தொண்டரும் சமஸ்கிருத அறிஞரும் பிரசாந்தி நிலைய வேத உச்சாடன குழுவின் முக்கியஸ்தரும் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் சமஸ்கிருத பாடசாலை ஆசிரியருமான ஸ்ரீ வேத நாராயணன் கொல்லங்கோடே அவர்கள் சம்மாந்துறை வீரமுனை பகவான் சத்ய சாயி நிலையத்திற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தருகின்றார்.

வருகை தரும் அவர் காலை 9.30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும் ஆற்றுகின்றார்.

மனித சமுதாயத்திற்கு வேதத்தின் முக்கியத்துவம் மற்றும் வேதத்தினை கற்பித்தலின் முக்கியத்துவம், சத்ய சாயி பாபாவின் உடனான அவரது நேரடி அனுபவம் தொடர்பில் பகிர்ந்து கொள்கின்றார்.

இலங்கைக்கு வருகை தரும் அவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் சாயி பக்தர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.