( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் புதிய வலயகல்விப் பணிப்பாளராக டாக்டர் எஸ்.எம்.எம்.உமர் மௌலானா நேற்று(20) வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.
இதுவரை வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த எஸ் எம்எம் .அமீர் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளராக எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கின்றார்.
கிழக்கு மாகாண கல்வி செயலாளர் திசாநாயக்க இந்த நியமனத்தை பிறப்பித்திருந்தார்.
மட்டக்களப்பு மத்தி வலயகல்வி பணிப்பாளராக இருந்த டாக்டர் உமர் மௌலானா, இதே சம்மாந்துறை வலயத்திலே முன்னர் பிரதிக் கல்வி பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment