(வி.ரி. சகாதேவராஜா)
ஜெர்மனியின் பிரபல நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் அருணி வேலழகன் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் நரம்பியல் உபாதை தொடர்பான செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த ( 05.01.2023 - 06.01.2023) இரண்டு நாட்கள் நரம்பியல் உபாதை நோயாளர் முகாமைத்துவம் சம்பந்தமான செயலமர்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக ஜெர்மனியின் பிரபல நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் அருணி வேலழகன்
கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது நரம்பியல் உபாதை ஏற்படும் காரணங்கள், இந்நிலைமைகள் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம், இந்நிலை ஏற்பட்டால் எவ்வாறு பராமரிப்பு வழங்க வேண்டும், என்னென்ன விடயங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் இலகுவான எளிமையான நடைமுறையில் அனைவருக்கும் விளங்கக்கூடிய விதத்தில் Dr.அருணி வேலழகன் ( நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ) அவர்களினால் விளக்கங்கள் மற்றும் செயன்முறைப்பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
இச்செயல் முறை விளக்கம் மிகுந்த பிரயோசனமாகவும் அவசியமாகவும் இருந்ததாக கலந்து கொண்டோர் கூறினர்.
Post a Comment
Post a Comment