மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர்,கல்முனை மாநகர சபைக்கு விஜயம்




 (பாறுக் ஷிஹான்)



மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் இன்று புதன்கிழமை (04) மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளினால் இவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் இரு தரப்பு புரிந்துணர்வு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மலாக்கா ஆளுநருடன் மலேசிய பல்கலைக்கழக உபவேந்தர் போராசிரியர் அப்துர் ரஸ்ஸாக் பின் இப்றாஹிம், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் மலேசிய இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், மலேசிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக அதிகாரிகள் சிலரும் வருகை தந்திருந்தனர்.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்ஸின் பக்கீர், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எம். நிஸார், எம்.எஸ்.எம்.ஹாரிஸ், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், யூ.எஸ்.சபீனா, சர்மில் ஜஹான், எம்.ஐ.ரஜாப்தீன், ஏ.எஸ்.ஹமீட்,  எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், பி.மனோரஞ்சினி, மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.றஹீம்  உட்பட உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மலாக்கா ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்களின் கல்முனை விஜயத்திற்கு மதிப்பளித்து  முதல்வரினால் விஷேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆணையாளரினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

அத்துடன் கல்முனை மாநகர முதல்வருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் பரிசு என்பவற்றை வழங்கி, மலாக்கா ஆளுநர் மகிழ்ச்சி பாராட்டினார்.