(காரைதீவு சகா)
பிறந்திருக்கின்ற 2023 ஆம் ஆண்டில் அரச அலுவலகங்களின் கடமைகள் நேற்று(2) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
அந்த வகையில், காரைதீவு பிரதேச சபையின் அலுவலக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண வைபவம் சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நேற்று காலை ஆரம்பமானது.
சபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னதாக, தேசிய கொடி ஏற்றி சத்திய பிரமாணம் எடுக்கும் வைபவம் இடம்பெற்றது.
தொடர்ந்து தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உரையாற்றினார்.
அச்சமயம் , சுயேட்சை அணியின் சார்பில் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர் நமச்சிவாயம் ஜெயகாந்தன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டமையை வரவேற்கின்ற நிகழ்வும் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment