திருக்கோவில் பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கடற்ரையில் சிரமதான பணி..!




 


(எம்.என்.எம்.அப்ராஸ்)


எமது பிரதேசத்தை நாமே சுத்தப்படுத்துவோம்"  எனும் தொனிப்பொருளின் ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன்  ஹெல்விடாஸ்(HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி(PCA)
நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின்,கீழ் உள்ள திருக்கோவில்  பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இளைஞர்கள்,யுவதிகள்,பொது மக்கள்,திருக்கோவில் பிரதேச விளையாட்டு விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்க்கொண்டனர்.திருக்கோவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலய முன்றலை அண்மித்த கடற்கரை சுற்று சூழல் பகுதியில் சிரமதான பணி நேற்று (13)முன்னெடுக்கப்பட்டது.

சமாதான தொண்டர் ஜே.சங்கீத் அவர்களின்
நெறிப்படுத்தலில் திருக்கோவில் பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் இணைப்பாளர் எஸ்.வினுசியா
வின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்கள் கே.டி.ரோகிணி,அட்டாளைச்
சேனை பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் இணைப்பாளர் ஜே. சஜித், பொத்துவில் பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் இணைப்பாளர் எம். எஸ்.சஸ்லி அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.