(வி.ரி. சகாதேவராஜா)
கவனயீர்ப்பு
போராட்டம்
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ( 5) வியாழக்கிழமை திருக்கோவிலில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இக்கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியது.
ஒருமித்த குரலினை உரக்கச் செல்வோம் என்ற அடிப்படையில் நேற்று திருக்கோவில் ஆதார வைத்திய சாலை முன்பாக இப் போராட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.
போராட்டத்தில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி. கமலராஜன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாணவர் மீட்பு குழு தலைவர் செல்வராஜா கணேஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கலந்து கொண்டார்கள்.
சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள் .
சுமார் ஒன்றரை மணி நேரம் கவனயீர்ப்பு
போராட்டம் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment