(வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். எம். எம். அமீருக்கு சம்மாந்துறை அதிபர்கள் சங்கம் கௌரவம் அளித்தது.
சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற அதிபர்கள் கூட்டத்தில் பணிப்பாளர் அமீர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அமீர் வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றதை யிட்டு இக் கௌரவம் அளிக்கப்பட்டது.
சம்மாந்துறை அதிபர்கள் சங்கத் தலைவர் எம்.மீராமொஹைடீன் பணிப்பாளர் அமீருக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினார். தொடர்ந்து செயலாளர் யு .எல். நிஹால் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.
Post a Comment
Post a Comment