(நூருள் ஹுதா உமர்)
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன
இதற்கமைய தேவை உடைய மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்று 2023.01.05 இடம்பெற்றது
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நிந்தவூர் கமு/கமு/அல் அஷ்ரக் கனிஷ்ட பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேவனுடைய மாணவ, மாணவியர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன
இந்த நிகழ்வில் நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், பாடசாலை அதிபர் எம் ஹபீபுல்லாஹ், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது ஆகியோர் கலந்து கொண்டு கண்ணாடிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment