(க.கிஷாந்தன்)
உலகெங்கிலும் 01.01.2023 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. காலை வேளையிலேயே சில பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அத்தோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகளும், மசூதிகளில் விசேட தொழுகைகளும், இடம்பெற்றதோடு, விகாரைகளிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment