பாண்டிருப்பில் ஊர்வலத்துடன் நிறைவடைந்த கவன ஈர்ப்பு போராட்டம்





 (வி.ரி. சகாதேவராஜா)


 ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆறு நாட்களாக இடம் பெற்று வந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றுமுன்தினம்(10) செவ்வாய்க்கிழமை  கல்முனை பாண்டிருப்பில் ஊர்வலத்துடன்  நிறைவடைந்தது.

 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இப் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியது.

 ஒருமித்த குரலினை உரக்கச் செல்வோம் என்ற அடிப்படையில் நேற்று வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தின் முன்பாக இப் போராட்டம் காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற்று வந்தது.

 போராட்டத்தில் பல அரசியல் தலைவர்களின் கலந்து கொண்டார்கள்.
இறுதிநாளில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் சமய தலைவர்களான சிவசிறி ந  பத்மநிலோஜன் குருக்கள் , அருட்தந்தை  ஜேசுதாசன் அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

 சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள் . அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.