'பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும்,தமிழரும்' எனும் ஆய்வு நூல் வெளியாகின்றது




 


(சுகிர்தகுமார்)


  ஆய்வார்வலரும், தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட 'பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும்,தமிழரும்' எனும் ஆய்வு நூல் எதிர்வரும் 2023.02.12 ஆம் திகதி புதிய வருடத்தின் முதல் நிகழ்வாக வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளது.

ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கூட்டம் நேற்று தமிழ் சங்க அலுவலகத்தில் நடைபெற்றபோதே இத்தகவல் வெளியிடப்பட்டது.

தமிழ் சங்கத்தின் கௌரவ தலைவர் க.இரத்தினவேல் மற்றும் தலைவர் நா.சுதாகரன் ஆகியோரின் ஒருங்கிணைந்த தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நூல் வெளியீடு தொடர்பான தகவலை ஆசிரியரும் சமூக ஆர்வலருமான எஸ்.புண்ணியமூர்த்தி அவர்கள் தெரிவித்ததுடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பான தகவல்களை சமூக ஆர்வலர் எஸ்.கனகரெத்தினம் குறிப்பிட்டார்.

வரலாற்று சிறப்பு மிக்கவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்நூலினை எமது பிரதேசத்தின் மிகப்பெரும் சொத்தாக கருதப்படும் ஆய்வார்வலரும், தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்கள் நூலாசிரியராக இருந்து உருவாக்கியுள்ளதுடன் 167 பக்கங்களை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலின் உருவாக்கத்திற்கான நிதி ஏற்பாட்டினை ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை வழங்கியுள்ளதுடன் வெளியீடு செய்து வைக்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேநேரம் அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தின் புதிய ஆண்டுக்கான நிர்வாக  சபைக்கூட்டமும் நேற்று நடைபெற்றது.

இதன்போது சங்கத்தின் புதிய செயலாளராக திரு என்.செல்வநாதன் அவர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இந்நூல்