இலங்கை அணியுடனான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தியது.
நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் களதடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 113 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு 374 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணி சார்பில் தசுன் ஷானக்க ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Post a Comment
Post a Comment