ஒரு ரூபா பணமும் இல்லாமல் - ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் - மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு எம்பியானவன் நான் என தன்னை உதாரணம் காட்டி - மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி முஷாரப் எம்பி உரையாற்றினார்
இ் - பெஸ்ட்(E -best) கல்வி நிறுவனத்தின் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி.எம்.எம்.ஜவ்பர் தலைமையில் கல்முனையில் இன்று (07) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒரு ஊடகவியலாளராக இருந்து அதிகளவான எதிரிகளை சம்பாதித்துள்ளேன்.ஆனால் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தாயின் 10 ரூபா பணத்தை முதலீடாக வைத்து வந்துள்ளேன்.பணம் கொடுத்து வாக்குகளை பெறாமல் மக்கள் பணம் கொடுத்து என்னை அதாவது ஊடகவியலாளனை பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கியுள்ளனர்.எனவே இளைஞர்களினால் சாதிக்க முடியும் என்ற நிலைமை தோன்றியுள்ளது.என்றார்.
கணக்கியல் விரிவுரையாளர் எம். ஐ.எம்.பாரிஸ் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் , இ் - பெஸ்ட்(E -BEST)கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகிய பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இ் - பெஸ்ட்(E -best) கல்வி நிறுவனமானது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்முனை,ஹற்றன்,பொலன்னறுவையில் பிரதேசங்களில் தற்போது கிளைகள் காணப்படுவதுடன் மேலும் மாணவர்களின் கல்வி வளரச்சியில் பல்வேறு சமூக நல பணியினை மேற்கொண்டு வருவதுடன், 09 ஆவது ஆண்டில் கால்பதித்து விரைவில் 10 தசாப்தத்தை பூர்த்தியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment