பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்




 


பாறுக் ஷிஹான்


பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

DArk Foundation, Sri Lankaவின் 1.5 மில்லியன் நிதியில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

திங்கட்கிழமை (19) மாலை  கல்முனை கல்வி வலயத்திற்க்குட்பட்ட 28 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான    இலவச பாடசாலைப் பாதணிகள் டாக்(DArk) பவுண்டேஷன் அமைப்பினரால் வழங்கப்பட்டதுடன் சாதனையாளர்களும்  கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில்  பவுண்டேஷன் நிறுவுனர்  டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தலைமை தாங்கியதுடன்   கிழக்கு மாகாண கணனி தொழில்நுட்ப பேரவை பணிப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமரின்  நெறிப்படுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.


அதிதிகள்  கலாச்சார அம்சங்களுடனான முறையில் வரவேற்கப்பட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம்.எம் ஹரிஸ்  கலந்து கொண்டதுடன்  கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீம்  கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம் எம் ஆஷிக் ஆகியோர்  கலந்து கொண்டனர். மேலும்  உதவிக்கல்வி பணிப்பாளர் நஸ்மியா சனூஸ்,   உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்